\
தமிழகத்தில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா - 448 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா - 448 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா - 448 பேர் உயிரிழப்பு!
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 5,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழந்தனர். இதில், இணை நோய் இல்லாதவர்கள் 125 பேர் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக, கோவை மாவட்டத்தில் 3,165 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,954 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 1,758 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,511 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com