தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் புதிதாக 1.32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் புதிதாக 1.32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் புதிதாக 1.32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் புதிதாக1.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 17ஆம் தேதி வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728ஆக இருந்தது. இதுவே 10 நாட்களில் அதாவது 27ஆம் தேதி 11 லட்சத்து 13 ஆயிரத்து 502ஆக உயர்ந்துள்ளது. இந்த 10 நாட்களில் மட்டும் புதிதாக 1 ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 774 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல கடந்த 10 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 71இல் இருந்து 13 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 657 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனாவுக்காக சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கையும் 10 நாட்களில் 65 ஆயிரத்து 635இல் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 855ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com