தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா நோய்ப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,535 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் 4,464 பேர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் குணமடைந்து 219 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சென்னையில் மட்டும் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.