தமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு

தமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு

தமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா உயிரிழப்பு
Published on

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

துபாயிலிருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர், கடந்த 3-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
கொண்டு வரப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு வந்த ஒரு மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, மதுரையில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று மட்டும் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் விழுப்புரத்தையும் மற்றொருவர் தேனியையும் சேர்ந்தவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com