\
தமிழகத்தில் 3000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 3000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 3000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

85,494 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழகத்தில் 3,282, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 8 பேர் என ஒரே நாளில் தொற்று 3,290ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,800 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் ஒரே நாளில் கூடுதலாக 500 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மேலும் 12 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12, 750ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,606ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,715 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,61,424 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com