திருப்பூரில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாணவ மாணவிகள் பங்கேற்பு
திருப்பூரில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான உதயம் மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

நல்லூர் பகுதியில் இருந்து இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட மாரத்தான் போட்டி 5 கிலோ மீட்டர் தூரமும், முத்தனம்பாளையம் பகுதியில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட மாரத்தான் போட்டி மூன்று கிலோ மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கு பெற்றவர்கள் கொரோனா தொற்று மூன்றாவது அலை வருவதற்கு முன் காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக் கவசம் அணிந்து மாரத்தான் போட்டியில் பங்கு பெற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com