கொரோனா விழிப்புணர்வு: மாணவ மாணவிகள் தொடர்ந்து ஒருமணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

கொரோனா விழிப்புணர்வு: மாணவ மாணவிகள் தொடர்ந்து ஒருமணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

கொரோனா விழிப்புணர்வு: மாணவ மாணவிகள் தொடர்ந்து ஒருமணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
Published on

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஒருமணி நேரம் மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகளவில் பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் கடுமையாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை அனைத்து தரப்பு அமைப்புகளும் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் மகளிர் கலைக்கல்லூரியுடன் இணைந்து ஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் சாதனை புத்தக நிறுவனம் நடத்திய கொரோனா விழிப்புணர்வுக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர்.

இச்சாதனையை நோபல் சாதனை புத்தகத்தின் முகமது செராஜ் அன்சாரி அங்கீகரித்து சான்று வழங்கினார். இந்நிகழ்வில் கோபிசெட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வம், தனியார் மகளிர் கலைக்கல்லூரியின் ஜெகதா லட்சுமணன், தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சந்தோஷ்குமார், தேசிய சிலம்பம் கமிட்டி தியாகு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு ஒரு மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com