சென்னையில் மண்டல வாரியாக எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னையில் மண்டல வாரியாக எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா?
சென்னையில் மண்டல வாரியாக எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா?

மண்டல வாரியாக எங்கெங்கு எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மளிகைக் கடைகள், பால் பூத், இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகள் ஆகியவை நேரக்கட்டுப்பாட்டுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகளுக்கு வரும் நபர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை, 1323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூர் - 05
மணலி - 00
மாதவரம் - 03
தண்டையார்பேட்டை 20
ராயபுரம் - 73
திருவிக நகர் - 33
அம்பத்தூர் - 00
அண்ணாநகர் - 24
தேனாம்பேட்டை - 19
கோடம்பாக்கம் - 26
வளசரவாக்கம் - 05
ஆலந்தூர் - 03
அடையாறு - 07
பெருங்குடி - 07
சோழிங்கநல்லூர் - 02
பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் - 01

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com