தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா உறுதி ?
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 15 பேர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் ஒருவர் குணமடைந்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மற்றும் சேலத்தில் தலா 5 பேரும், வேலூர், திருச்சி, கோவை, நெல்லை, திருப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லண்டனிலிருந்து வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? அவருக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.