காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா - மதுவிலக்கு காவல்நிலையம் மூடல்
திருவள்ளூர் மாவட்டம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மதுவிலக்கு காவல் நிலையம் மூடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 594 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது பெரிய பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 நாள்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்குத் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் பணிபுரிந்த மதுவிலக்கு காவல் நிலைய காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனைச் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் மூடப்பட்டது.
.

