அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வுமுறையில் மாற்றம்: அடிப்படை உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வுமுறையில் மாற்றம்: அடிப்படை உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வுமுறையில் மாற்றம்: அடிப்படை உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக விதி எண் 20 (அ), விதி எண் 43 மற்றும் விதி எண் 45 ஆகிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான அதிகாரத்தைக் கூட்டியிருப்பதாகத் தெரிகிறது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு மாற்றாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இறுதிமுடிவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரே உறுதிப்படுத்துவர் என்று தெரியவந்துள்ளது.

அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்செய்ய சட்டவிதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதில் அடிப்படை உறுப்பினர்களால் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தொடருகிறது. அதேசமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் புதிய தேர்வுமுறையை மாற்ற பொதுக்குழுவிற்கு அதிகாரமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com