அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை!
Published on

சசிகலா தமிழகம் திரும்பவுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர்.


சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 5 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது. அதில், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக அதிமுகவிலுள்ள பலர் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

அவர்களை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் சிலர் அதிமுகவிலேயே சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சசிகலா தமிழகம் திரும்பவுள்ளதால், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com