தமிழ்நாடு
குன்னூரில் தொடர் மழை: அணைகள் நீர்மட்டம் உயர்வு
குன்னூரில் தொடர் மழை: அணைகள் நீர்மட்டம் உயர்வு
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழைக் காரணமாக அப்பகுதியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருவாரமாக பெய்துவரும் தொடர் கனமழையால், அப்பகுதியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குந்தா, அப்பர் பவானி, ரேலியா உள்ளிட்ட அணைகளிலும், ஜிம்கானா, கரன்சி ஆகிய தடுப்பணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

