fire fighterspt desk
தமிழ்நாடு
குன்னூர்: வீட்டினுள் புகுந்த சிறுத்தை.. பிடிக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களை தாக்கியதால் பரபரப்பு
குன்னூர் புரூக்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்த சிறுத்தையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு அலுவலர்களை சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் புரூக்லண்ட்ஸ் பகுதியின் அருகில் சோலைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை சோலைக்குள் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அங்கிருந்த விலாமை பர்க் என்பவர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு அலுவலர்கள் கிருஷ்ணன் குட்டி, முரளி, கண்ணன் ஆகிய 3 பேரும் வீட்டினுள் இருந்த சிறுத்தையை துரத்த முயற்சித்தனர்.
fire fighterpt desk
அப்போது ஆவேசமடைந்த சிறுத்தை 3 பேரையும் தாக்கியுள்ளது. இதில், 3 பேருக்கும் கழுத்து கை, கால், உள்ளிட்டப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையின் அதிரடிப்படை வீரர்கள் கவச உடையுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.