தமிழ்நாடு
அமரர் ஊர்தியில் ராணுவ வீரர்களின் உடல்கள் - விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்
அமரர் ஊர்தியில் ராணுவ வீரர்களின் உடல்கள் - விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சுமந்துசென்ற அமரர் ஊர்தியின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை வெலிங்டனில் இருந்து சூலூருக்கு அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் போலீசார் சிலர் காயமடைந்தனர்.