பசும்பொன்னில் பக்தர்களின் பாதணிகளை பாதுகாக்க போலீசாரை நியமித்ததாக சர்ச்சை

பசும்பொன்னில் பக்தர்களின் பாதணிகளை பாதுகாக்க போலீசாரை நியமித்ததாக சர்ச்சை
பசும்பொன்னில் பக்தர்களின் பாதணிகளை பாதுகாக்க போலீசாரை நியமித்ததாக சர்ச்சை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் காலணிகளை பாதுகாக்கும் பணிக்கு காவலர்களை நியமித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அவரது 115-வது பிறந்தநாள் மற்றும் 60-வது குரு பூஜை நடைபெற்றது. இதில், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

இந்நிலையில், இந்த விழாவிற்கு வருபவர்களின் காலணிகளை பாதுகாக்க தனியாக ஸ்டால் அமைத்து இரண்டு காவலர்களை பணியில் அமர்த்தி உத்தரவிட்ட நகல் வாட்ஸ்-அப்பில் பரவியது. இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து கமுதி வட்டாச்சியர் சிக்கந்தர் பவிதாவிடம் கேட்டபோது... பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் காலணிகளுடன் செல்வதை தவிர்க்கும் விதமாகவும் காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்காகவும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து ஒரு ஸ்டால் அமைத்து பாதுகாக்க காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டு காவல்துறை ஆய்வாளர் மற்றும் பேரூராட்சியில் நான்கு பேர், வருவாய்த் துறையில் இருந்து இரண்டு பேரும் எங்களிடம் கேட்டார்கள்.

இதையடுத்து இரு காவலர்களின் பெயர்களை கொடுத்து மொத்தமாக டூட்டி போடச்சொல்லி என்னிடம் கேட்டதன் பேரில் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம். ஆனால், கூட்ட நெரிசலில் இதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதாலும் அத்திட்டம் கைவிடப்பட்டது. மேலும் அதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடாமல் கிழித்துப் போட்டு விட்டேன்.

இதனை முன் கூட்டியே யாரோ பெரிதுபடுத்த திட்டமிட்டு வாட்ஸ் அப்பில் எடுத்து வைத்துள்ளனர். இது குறித்து எங்கள் துறை அதிகாரிகளிடம் இந்த நகல் எப்படி வெளியே போனது என விசாரித்து வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com