நாமக்கல்: தேவாலயம் அருகே விநாயகர் சிலையை வைத்து வழிபட முயன்றதால் தள்ளுமுள்ளு

நாமக்கல்: தேவாலயம் அருகே விநாயகர் சிலையை வைத்து வழிபட முயன்றதால் தள்ளுமுள்ளு
நாமக்கல்: தேவாலயம் அருகே விநாயகர் சிலையை வைத்து வழிபட முயன்றதால் தள்ளுமுள்ளு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை வைத்து வழிபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

நாமக்கல் சாலை கிரிவலப்பாதை பிரிவில் தேவாலயம் ஒன்று உள்ளது. தேவாலயத்தின் அருகே இந்து அமைப்பினர் திடீரென்று பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தேவாலயத்தை சேர்ந்தவர்கள் சிலையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், விநாயகர் சிலையை அகற்றக்கூடாது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

அப்போது பெண் ஒருவர் சாமியாடியபடி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவத்தால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

கோட்டாட்சியர் இளவரசி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தள்ளுமுள்ளுக்கு இடையே விநாயகர் சிலை அகற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமணத்தில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com