திமுக வேட்பாளரை வரவேற்பதில் வாக்குவாதம்: கைகலப்பு கல்வீச்சு காயம் – காவல்நிலையத்தில் புகார்

வேளச்சேரியில் திமுக உட்கட்சி பிரச்னையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முருகவேல்
முருகவேல்pt desk

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை வேளச்சேரி 176வது வார்டு திமுக வட்டச் செயலாளர் முருகவேல் (44). இவரது மனைவி மகேஸ்வரி முருகவேல் 175வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், நேற்று தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது 176வது வார்டு வட்டச் செயலாளர் முருகவேல் வரவேற்பு கொடுத்துள்ளார். அதே வேளையில் ஆர்.கே.குட்டி என்பவரும் பிரமாண்டமாக வரவேற்பு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆர்.கே.குட்டி
ஆர்.கே.குட்டிpt desk

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 5வது மெயின் ரோட்டில் வைத்து ஆர்.கே.குட்டி, அசோக் ஆகியோர் தாக்கிவிட்டதாகக் கூறி இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முருகவேல் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகம் மற்றும் தலையில் காயம், ஏற்பட்டுள்ள நிலையில், முருகவேலின் மனைவி மகேஸ்வரி காவல் நிலையம் சென்ற போது அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் காரின் பின் பகுதி சேதமானதாக கூறியுள்ளார்.

முருகவேல்
”கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்தது” - ஜாமீனில் வெளிவந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்!

இது தொடர்பாக மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகவேல் ஆகிய இருவர் மீதும் வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆர்.கே.குட்டி புகாரளித்துள்ளனர். ஆர்.கே.குட்டி கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது உட்கட்சி பிரச்னை இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர். இன்று விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com