தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை

தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை
தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலுக்கு அம்மாவாசையன்று 4 நாட்கள், பௌர்ணமியன்று 4 நாட்கள் என மாததிற்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பொழிவு மற்றும் ஓடைகளில் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஜப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு 2.11.21. முதல் வரும் 5.11.21 வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com