\
நீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா ? போலீஸார் தீவிர விசாரணை

நீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா ? போலீஸார் தீவிர விசாரணை

நீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா ? போலீஸார் தீவிர விசாரணை
Published on

தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களில் 4 பேர் மருத்துவம் பயின்று வருவதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில் சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

உதித் சூர்யா மட்டுமின்றி மேலும் 6 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களில் 2 பேர் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்ற 4 பேருக்கு பதில் வேறு 4 பேர் தமிழகத்தில் மருத்துவம் பயின்று வரும் தகவலும் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் தற்போது கைதாகியுள்ள மருத்துவர் வெங்கடேசனின் நண்பர் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com