வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்களில் பணம் நிரப்பி வைக்க அறிவுறுத்தல்
பண்டிகை நாட்கள் காரணமாக நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பணத்தை நிரப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும், விஜயதசமி பண்டிகைக்கு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையும் உள்ளது. அதேபோல், அக்டோபர் 2-ம் தேதியான திங்கள்கிழமை காந்தி ஜெயந்தி வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவை இருக்காது. இதனால் மக்களுக்கு எப்படியும் பணப்பிரச்னை ஏற்படும். இதனைத் தடுக்கும் விதமான அனைத்து ஏடிஎம் மையங்களிலும் முழுவதுமாக பணத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பணம் நிரப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.