தொடரும் கனமழை - 3ஆவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் ஆய்வு
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ரமணா நகர், சுப்பிரமணிய தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்ற அவர், அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். அதன்பின் கோபாலபுரம் ஆரம்பப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமையும், நால்வர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றுவரும் உணவு தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டார். அதன்பின் கே.சி.கார்டன், ஜி.கே.எம் காலனி உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
கொளத்தூர் தொகுதிக்கு அடுத்ததாக வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு செய்ய உள்ளார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு, சென்னை மாநகர ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.