\
அடையாளத்தை தொலைத்துவிட்டு வாழ முடியாது..... இளைஞர்கள் ஆவேசம்

அடையாளத்தை தொலைத்துவிட்டு வாழ முடியாது..... இளைஞர்கள் ஆவேசம்

அடையாளத்தை தொலைத்துவிட்டு வாழ முடியாது..... இளைஞர்கள் ஆவேசம்
Published on

சென்னை மெரினாவில் ஓயாத கடல் அலைகள் போல மாணவர்கள், இளைஞர்களின் போராட்டமும் தொடர்கிறது. இரவில் கொட்டும் பனியையும் தாண்டி பெண்கள், குழந்தைகளும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டக்களத்தில் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் எனவும், அடையாளத்தை தொலைத்துவிட்டு வாழ முடியாது என்றும் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் 4 வது நாளான இன்று இளைஞர்கள் உற்சாகத்துடன் போராட்டத்‌தை தொடங்கியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com