தமிழ்நாடு
ஆவின் பாலில் கலப்படம்: உரிமையை ரத்து செய்யக் கோரிக்கை
ஆவின் பாலில் கலப்படம்: உரிமையை ரத்து செய்யக் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் செயல்படும் ஆவின் பாலகத்தில் தரமற்ற பால் விநியோகிக்கப்படுவதால் பாதிக்கப்படுவதாகக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவின் பாலகத்தின் உரிமைத்தை ரத்து செய்து, புதியதாக கலப்பிடமில்லாத பொருள்கள் விற்பனை செய்ய புதிய அங்காடி ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியம் உறுதியளித்தையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.