“இந்த இடங்களில் ரயில் சேவை தேவை; அதுதான் எங்களின் கோரிக்கை” நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்

“அரசாங்கம் சில சலுகைகள் திட்டங்களை அறிவித்து இருந்தனர். எங்களின் நெடுநாள் கோரிக்கை திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு ஒரு கூடுதல் ரயில் வேண்டும் என்பதுதான்” - புஷ்பவனம்
புஷ்பவனம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
புஷ்பவனம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்PT

நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த புஷ்பவனம் அவர்களிடம் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உங்கள் துறை சார்ந்த எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“அரசாங்கம் சில சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து இருந்தனர். எங்களின் நெடுநாள் கோரிக்கை திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு ஒரு கூடுதல் ரயில் வேண்டும் என்பதுதான். 1960 இந்தப் பாதையில் முதல் ரயில் வந்தது. ஆனால் அதற்குப்பின் ரயில் இல்லை. ஆகவே கூடுதல் ரயில் சேவை தேவை.

அதேபோல் நாமக்கல், திருச்சிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். அதேபோல் முசிறி - தொட்டியம் இந்தப் பகுதியிலும் குறு விவசாயம் மற்றும் வியாபாரங்கள் இருப்பதால், இந்த இடங்களில் ரயில் சேவை தேவை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com