பயனாளி இறந்தும் பணம் தராமல் அலைகழித்த காப்பீட்டு நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

பயனாளி இறந்தும் பணம் தராமல் அலைகழித்த காப்பீட்டு நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!
பயனாளி இறந்தும் பணம் தராமல் அலைகழித்த காப்பீட்டு நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

காப்பீட்டு திட்டத்தில் பணம் கட்டிய பயனாளி இறந்த பிறகு, குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகையை தர மறுத்து அலைக்களித்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திருநெல்வேலி வி.எம் சத்திரம் BSNL குடிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகன், BSNL நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். முருகன் ரெலிகேர் ஹெல்த் காப்பீடு நிறுவனத்தில் ஐந்து லட்சத்திற்கு காப்பீட்டு தொகையை ஒரே தவணையாக செலுத்தி பாலிசி எடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23-5-2019 அன்று திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாக்குடி பகுதியில் நடந்த விபத்தில் முருகன் உயிரிழந்து விட்டார். முருகன் உயிரிழப்புக்கு ரெலிகேர் ஹல்த் காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 5 லட்சத்திற்குரிய காப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும். ஆனால் குடும்பத்தினர் பலமுறை முயற்சி செய்தும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் காப்பீட்டு நிறுவனம் எடுக்கவில்லை.

தொடர்ந்து காலதாமதப்படுத்தி, பல காரணங்கள் சொல்லி முருகன் குடும்பத்தாரை அலைக்கழித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகன் குடும்பத்தினர், வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் ஐம்பதாயிரமும், வழக்கு செலவு ரூபாய் ஐயாயிரமும் வழங்க வேண்டும். மேலும் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையான ரூபாய் 5 லட்சத்தை 2019 செப்டம்பர் மாதம் முதல் ஆறு சதவிகித வட்டியுடன் சேர்த்து ரெலிகேர் ஹெல்த் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com