”பணத்த கொடுக்க மாட்டேங்கிறாங்க”- தென்னை மரத்தில் ஏறி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை மிரட்டல்!

”பணத்த கொடுக்க மாட்டேங்கிறாங்க”- தென்னை மரத்தில் ஏறி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை மிரட்டல்!
”பணத்த கொடுக்க மாட்டேங்கிறாங்க”- தென்னை மரத்தில் ஏறி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை மிரட்டல்!

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிகள் முடித்தும், ஒப்பந்தம் வழங்கிய நபர் கொடுக்கவேண்டிய பணத்தை வழங்கவில்லை எனக் கூறி, தென்னை மரத்தில் ஏறி கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியான பாறசாலை அருகேயுள்ள செங்கல் பகுதியில், விஜயன் என்பவரது வீட்டின் முன்புறம் உள்ள தென்னை மரத்தில் ஏறிய, பாலியோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கட்டிட ஒப்பந்ததாரர், மரத்தில் இருந்தபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து பாறசாலை போலீசாருக்கு, ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து தென்னை மரத்தின் மேல் பகுதியில் இருந்து ஒப்பந்ததாரர் சுரேஷை பாதுகாப்பாக கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் ஒப்பந்ததாரர் சுரேஷ், விஜயகுமார் என்பவரது வீடு கட்ட ஒப்பந்தம் எடுத்து, அந்தப் பணிகளை முடித்தும் தனக்கு தரவேண்டிய மீதி தொகையான 2,32,000 ரூபாய் தந்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என உறுதியாகக் கூறி தென்னை மரத்தின் மீது இருந்து தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டே இருந்தார். இதனால் மக்கள் கூட்டம் கூடியநிலையில், 3 மணிநேரத்திற்குப் பிறகு ஒப்பந்ததாரரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சமாதானம் பேசி கீழே இறக்கினர்.

பின்னர் கீழே இறங்கிய அவரை, பணம் தரவேண்டிய கட்டிட உரிமையாளருடன் பேச வைத்தனர். ஆனால் அங்கு தீர்வு கிடைக்காத நிலையில், இருவரையும் பாடசாலை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com