\
மெரினாவில் மக்களை அனுமதிப்பது எப்போது?: தமிழக அரசு விளக்கம்

மெரினாவில் மக்களை அனுமதிப்பது எப்போது?: தமிழக அரசு விளக்கம்

மெரினாவில் மக்களை அனுமதிப்பது எப்போது?: தமிழக அரசு விளக்கம்
Published on

மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

தமிழகத்தில் பல கட்டங்களாக பல்வேறு வகையான தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாக மீனவர்கள் நலன் அமைப்பை சேர்ந்த பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதில், மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், உரிய முடிவு அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே மெரினாவை மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க நேரிடும் என தெரிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com