திருவாரூர்: மேல திருப்பாலக்குடி மதுரைவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா
திருவாரூர் மாவட்டம் மேல திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது.
மேலத்திருப்பாலக்குடி, உள்ளிக்கோட்டை ,ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களை சேர்ந்தவர்கள், இந்த ஆலயத்தை பரம்பரை பரம்பரையாக குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். இந்த மதுரைவீரன் கோவிலில் கடந்த 3 நாட்களாக யாகசாலை உருவாக்கி யாகம் வளர்த்து, பல்வேறு அபிஷேகங்கள் ஆகம விதிகளின்படி தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. மதுரை வீரனை தரிசிக்க சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். குடமுழுக்கு முடிந்ததும் புனித தீர்த்தம் மக்கள் மீது வாரி தெளிக்கப்பட்டது, அதன் பிறகு சுமார் 2000 மக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.