"கமல்ஹாசன் சொன்னதை ஆயிரம் சதவிதம் ஆதரிக்கிறேன்" கே.எஸ்.அழகிரி
கமல்ஹாசன் சொன்னதை 100 சதவிதம் அல்ல ஆயிரம் சதவிதம் ஆதரிக்கிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “ இஸ்லாம் மதத்தில் எப்படி ஐ.எஸ் இருக்கிறதோ அதற்கு இணையான ஒரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எனவே கமல்ஹாசன் சொன்னதை நான் நூறு சதவிகிதம் அல்ல, ஆயிரம் சதவிகிதம் ஆதரிக்கிறேன்., ஒப்புக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசினார். கமல்ஹாசனின் பேச்சுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் நாட்டை துண்டாடும் செயல்களில் ஈடுபடக் கூடாது என பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கேட்டுக்கொண்டுள்ளார்