ஜனநாயகனுக்காகக் களமிறங்கிய காங்கிரஸ்..! அரசியல் கணக்கு என்ன?
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், தணிக்கைக் குழுவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது நாளை (ஜனவரி 9) உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தணிக்கைக் குழுவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது; அதுவரை அது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை; அதிகாரத்தின் முன் கலையை மண்டியிடச் செய்தால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.
காங். வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி
த.வெ.க. தலைவர் விஜயின் ’ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தீயநோக்கத்துடன் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டள்ளது; ‘ஜனநாயகன்’ படத்தைத் தடுப்பது தமிழக மக்களை அவமதிப்பதற்குச் சமம்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்
பாஜக வேண்டுமென்றே ஜனநாயகனின் தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி , அதன் வெளியீட்டைத் தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர்
அரசியல் ஆதாயங்களுக்காக, மத்திய அரசு தனது அதிகாரங்களை பயன்படுத்தக் கூடாது.

