காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கும் குஷ்பூ பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்லி செல்ல விமான நிலையத்துக்கு வந்த குஷ்பூவிடம் செய்தியாளர்கள் பாஜகவில் இணைவது குறித்து எழுப்பிய கேள்விக்கு "நோ கமெண்ட்ஸ்...நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என தெரிவித்தார்.