காங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி

காங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி

காங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி
Published on

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

சேலம் மாவட்டம் குட்டப்பட்டியைச் சேர்ந்த குட்டப்பட்டி நாராயணன், 1977ஆம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். காமராஜரின் தொண்டராக இருந்த அவர், குட்டப்பட்டி கிராமத்திற்கு முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோரை வரவழைத்த பெருமைக்கு சொந்தக்காரர். 

97 வயதான குட்டப்பட்டி நாராயணன், நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். குட்டப்பட்டியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com