‘மேடையை விட்டு கீழே இறங்கு‘- கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸார் மோதல்

‘மேடையை விட்டு கீழே இறங்கு‘- கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸார் மோதல்

‘மேடையை விட்டு கீழே இறங்கு‘- கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸார் மோதல்
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கிடையே தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் கே.எஸ்அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் மாநில அளவிலான நிர்வாகிகள், மேடையில் கே.எஸ். அழகிரியுடன் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த நிர்வாகி பன்னீர்செல்வம், முனுசாமி என்பவரை பார்த்து மேடையில் இருந்து கீழே இறங்கக்கூறி சத்தம் போட்டார். முனுசாமி இறங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதனை தடுக்க முற்பட்ட மற்ற காங்கிரசார் பன்னீர்செல்வதை சரமாரியாக தாக்கி வெளியே அனுப்பினர். இதனால் இருதரப்பினருக்கிடையே அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அமைதியாக மேடையில் அமர்ந்தபடி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பார்த்தப்படி இருந்தார். இதையடுத்து மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து நடைப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பிலேயே நிர்வாகிகள் வெளிப்படையாக இருக்கைக்காக சண்டையிட்டு கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com