ராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்

ராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்

ராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்
Published on

முன்னாள் பிரதமர் ராஜீ‌‌வ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‌அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தும் சீமானை, தேசத்துரோக வழக்கில் கைதுச் செய்யவும், நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ‌வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் சீமானை கைது செய்யக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவரும், எம்பியுமான ஜெயகுமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.‌

இதனிடையே, சென்னை சின்னமலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அங்கு விரைந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com