\
ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை - ஜன.23 முதல் 3 நாட்கள் சுற்றுப் பயணம்

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை - ஜன.23 முதல் 3 நாட்கள் சுற்றுப் பயணம்

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை - ஜன.23 முதல் 3 நாட்கள் சுற்றுப் பயணம்
Published on

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வருகிற 23ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் தமிழகத்தில் 3 நாட்கள்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நடந்துவரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் வருகிறார். 23,24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களில்
தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவினாசி சாலையில் அமைந்துள்ள சித்ரா வளாகத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் பேசவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் மற்றும் தாராபுரம் பகுதிகளிலும் பரப்புரையை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ராகுல் காந்தி கடந்த 14ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றபிறகு, இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக தமிழகம் வரவுள்ளதால், திமுக கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com