“தமிழ்நாடு தலைவரை மாற்றுங்கள்” - கோரிக்கை வைத்த காங். நிர்வாகிகள்.. சோனியா காந்தி கொடுத்த அட்வைஸ்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற சோனியா காந்தியிடம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரே தலைமைப் பதவியில் இருப்பதாக சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைசிறந்த பெண் ஆளுமைகள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி கலந்துகொண்டார். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற சோனியா காந்தியிடம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரே தலைமைப் பதவியில் இருப்பதாக சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

2019 ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com