நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரண வழக்கு திணறும் காவல்துறை; தடயவியல் ஆய்வகங்களில் போதுமான வசதியில்லையா?

கடந்த எட்டு நாட்களாக கொலை குற்றவாளி யார் என்று தெரிந்துக்கொள்ள 10 தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தநிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த எலும்புத்துண்டுகளை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இறந்த ஜெயகுமார் தனசிங்
இறந்த ஜெயகுமார் தனசிங்புதிய தலைமுறை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நான்காம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்து அவர் மீட்கப்பட்டார். இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் ஆராய்த போலிசாருக்கு, இது கொலை என்று தெரியவந்தது.

அதன்பிறகு கடந்த எட்டு நாட்களாக கொலை குற்றவாளி யார் என்று தெரிந்துக்கொள்ள 10 தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தநிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த எலும்புத்துண்டுகளை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவை பரிசோதனை செய்ய காலதாமதமாகி வருவதால் இந்த குற்றத்தை புரிந்தது யார் என்று தெரியாமல் போலிசார் திணறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com