
மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே புளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது வடக்கு வாச்சியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழா கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திருவிழாவின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றொரு பிரிவினரின் வீட்டை சூறையாடி, பெண்களை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தவப்பாண்டி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.