\
சென்னை
சென்னைமுகநூல்

சென்னை | பயணியுடன் ஏற்பட்ட மோதல்... ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து நடத்துநர் உயிரிழந்த பரிதாபம்!

சென்னையில் பயணியுடன் ஏற்பட்ட மோதலில், நடத்துநர் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னையில் பயணியுடன் ஏற்பட்ட மோதலில், நடத்துநர் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெகன்குமார் என்பவர், சென்னை சின்னமலைப்பகுதியில் தங்கி மாநகரப் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். எம்.கே.பி. நகர் முதல் கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்தில், அவர் பணியில் இருந்தபோது, அமைந்தகரை அருகே பயணி ஒருவருடன் டிக்கெட் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட, டிக்கெட் மிஷினைக் கொண்டு பயணியை, நடத்துநர் ஜெகன்குமார் தாக்கியதாகவும், பதிலுக்கு பயணி திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்து ஜெகன்குமார் உயிரிழந்தார்.

சென்னை
தவெக மாநாடு|கோயிலில் பூஜை செய்த ரசிகர்கள்.. ’ஆட்சி அமைப்பது’ குறித்து தந்தை சந்திரசேகர் சொன்ன பதில்!

நடத்துநரை தாக்கியவர் வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்தது. சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com