டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனாவுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இருவரும் தலா 5 லட்சம் ரூபாய் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இருவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து டிடிவி தினகரன் இன்று மாலை திகார் சிறையிலிருந்து வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

