மதுரையைப் பரபரப்பாக்கிய கமல் ரசிகர்களின் கண்டன சுவரொட்டி
மதுரையில் அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கமல் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அதிமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை கமல் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அடங்கா தமிழன் கமல் குரூப்ஸ் என்ற பெயரில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டியில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.