\
ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள் ஓ.பி.ரவீந்திரநாத்

ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள் ஓ.பி.ரவீந்திரநாத்

ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள் ஓ.பி.ரவீந்திரநாத்
Published on: 

ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை சபாநாயகராக இன்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டு ஓம் பிர்லா பதவியேற்றுக்கொண்டார். அப்போது புதிய சபாநாயகரை வரவேற்றுப் பேசிய மீது தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேசினார் அப்போது " மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செய்து தருவார் என நம்புகிறோம்.  பேரறிஞர் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என கூறினார். மேலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் புரட்சித்தலைவி அம்மா ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதுபோல நீங்களும் ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com