முழு உடல் பரிசோதனை திட்டம் ஓராண்டு நிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்

முழு உடல் பரிசோதனை திட்டம் ஓராண்டு நிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழக அரசின் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்‌கர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தத் திட்டத்தின் மூலம், இதுவரை 13 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் இந்தத் திட்டத்தை கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் விரிவுபடுத்த இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நீட் தேர்வு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்து பேசியிருப்பதால், நீட் தேர்வு குறித்து நல்ல முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com