வட சென்னையில் முழு ஊரடங்கா ? அதிகாரிகள் ஆலோசனை

வட சென்னையில் முழு ஊரடங்கா ? அதிகாரிகள் ஆலோசனை

வட சென்னையில் முழு ஊரடங்கா ? அதிகாரிகள் ஆலோசனை
Published on

சென்னையின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும்மேல் வட சென்னையில் இருப்பதால் அந்தப் பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் ஆலோசனையில் அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புக்கு ஆரம்ப கால திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்பது புகார். மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் பாதிப்பு 21 ஆயிரத்துக்கு மேல் சென்று விட்டது. அவற்றில் 50 சதவிகிதத்துக்கு மேல் வட சென்னைக்கு உட்பட்ட 6 மண்டலங்களில் இருப்பதை காட்டுகிறது அரசின் புள்ளி விவரங்கள். சென்னையின் பிற பகுதிகளை விட வடசென்னையில்தான் உயிழப்பும் மிகம் அதிகம்.

இதுவரை 120 பேர் பலியாகி விட்டனர். 6 மண்டலங்களுக்கு உட்பட்ட 65 வார்டுகளில் 24 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் மிக அதிகம் ராயபுரம் மண்டலத்தில் தான். அங்கு மட்டும் பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு உள்ளது. தண்டடையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.கநகர் மண்டலஙகளிலும் தொற்று எண்ணிக்கை தலா 2 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாதவரத்தில் பாதிப்பு ஆயிரத்துக்குள் இருக்கிறது. ஊரடங்கு தளர்வுக்குபின் வடசென்னையில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்து விட்டது. இதற்கு மக்கள் நெருக்கமே காரணம் எனக் கூறி வரும் அதிகாரிகள் கடைவீதிகள், சந்தைகளில் காணப்படும் நெரிசலை சுட்டிக்காட்டுகின்றனர். சமூக விலல், முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்பதும் அவர்களின் ஆதங்கம். எனவே வடசென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதின் முலம் சென்னயின் மற்ற இடங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே முன்அறிவிப்பு செய்து 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு அடைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அவற்றில் 6.700 தெருக்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே வடசென்னை நீங்கலாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் தெரு அடைப்பு நடவடிக்கை தீவிரம் அடைய உள்ளது.

சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் தலைநகர் சென்னையோடு இணைந்து இருப்பதால் அந்த மாவட்டங்களிலும் தெரு அடைப்பு திட்டம் கடுமையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com