\
4 மாவட்டங்களில் அடுத்த 2 ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வின்றி பொதுமுடக்கம்..!

4 மாவட்டங்களில் அடுத்த 2 ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வின்றி பொதுமுடக்கம்..!

4 மாவட்டங்களில் அடுத்த 2 ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வின்றி பொதுமுடக்கம்..!
Published on

சென்னை உள்ளிட்ட முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வரும் 21ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகள் எவ்வித தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பகுதிகளில் ஜுன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகளிலும்) எந்தவித தளர்வும் இன்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும் எனப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com