தனியார் மருத்துவமனை செக்யூரிட்டி மூலம் 25 வயது தங்கைக்கு கொரோனா பாதிப்பு
தண்டையார்ப் பேட்டை மருத்துவமனையின் மீது அடுக்கடுக்கான புகார்களை தனிமைப்படுத்தப்பட்டோர் அடுக்கியுள்ளனர்.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 28 வயதான செக்யூரிட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இவருக்கு கடந்த புதன் கிழமை முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இவரின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது இவரின் 25 வயது தங்கைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரும் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். இதனை தொடர்ந்து இவர்களது பெற்றோர்களுக்கும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா இல்லை.
மொத்தமாக தண்டையார்பேட்டை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த 30 நபர்களுக்கு கொரோனா இல்லை என உறுதியான நிலையில், அவர்கள் மருத்துவமனையின் மீது புகார்களை அடுக்கியுள்ளனர். அவர்கள் கூறும் போது “ இங்கு சுகாதாரமான நல்ல உணவு வழங்கப்படவில்லை. காய்கறிகள் சரியாக வேகாததால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இரவிலும் சாதம் வழங்கப்படுவதால், அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.