ரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்நிலையங்களில் புகார்

ரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்நிலையங்களில் புகார்

ரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்நிலையங்களில் புகார்
Published on

பெரியார் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது இதுவரை ஆறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். இவ்விழாவில் பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்திலும் ரஜினிகாந்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி தொடர்பாக பொய்யான தகவலை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்தப் புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதே போல, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்திலும், புதுக்கோட்டை காவல்நிலையத்திலும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் தேச மக்கள் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்பட பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com