\
தரமில்லாத தயிர், மோரா? இங்கு புகார் செய்யலாம்!

தரமில்லாத தயிர், மோரா? இங்கு புகார் செய்யலாம்!

தரமில்லாத தயிர், மோரா? இங்கு புகார் செய்யலாம்!
Published on

சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம். கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்களை தெரிவிக்கலாம். 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 - 23813095 என்ற அலுவலக எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். commrfssa@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com