'படியில நிக்காதீங்க உள்ள வாங்க' - அறிவுறுத்திய பேருந்து நடத்துனரை தாக்கிய மாணவர்கள்
அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி பள்ளி மாணவர்கள் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திதிருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை, நொச்சலி வழியாக அத்திமாஞ்சேரிபேட்டை வரை இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் இந்த பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தின் நடத்துனராக குப்பைய்யா (50), ஓட்டுனராக ஹேமாத்திரி (48) ஆகியோர் பணியில் இருந்தனர்.
இந்நிலையில், திருத்தணியில் இருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில், நான்கு பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து காலியாக இருந்தும் மாணவர்கள் உள்ளே வராமல் படியில் ஆபத்தான நிலையில் தொங்கியப்படி பயணம் செய்துள்ளனர்.
இதையடுத்து ஓட்டுனர் ஹேமாத்திரி மாணவர்களை உள்ளே வருமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுனரை சராமரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஓட்டுனர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

